logo

02

E   |   සි   |  

 திகதி: 2025-04-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0518/2025: 2015.12.31ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள்: ‘அக்ரஹார’ காப்புறுதிக் காப்பீடு வழங்குதல்

518/2025
கௌரவ ஜே.சீ. அலவத்துவல,— பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) 2015.12.31 ஆம் திகதிக்கு முன் ஓய்வு பெற்ற அரசாங்க ஓய்வூதியதாரர்களுக்கு அக்ரஹார காப்புறுதி காப்பீடு கிடைக்கப்பெறாத போதிலும், 2016.01.01ஆந் திகதிக்குப் பின் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு அக்ரஹார காப்புறுதி காப்பீடு கிடைக்கப்பெறுவதை அறிவாரா என்பதையும்;
(ii) அந்த அநீதியை நிவர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(iii) 1997 இல் நியமிக்கப்பட்ட பீ.சி. பெரேரா சம்பள ஆணைக்குழுவின் பரிந்துரைகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு மட்டுமே நடைமுறையில் இருப்பதை அறிவாரா என்பதையும்;
(iv) பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்குப் பொருந்தும் வகையில் அந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-10

கேட்டவர்

கௌரவ ஜே.சீ. அலவத்துவல, பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-04-10

பதில் அளித்தார்

கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks