04

E   |   සි   |  

 திகதி: 2025-03-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0511/2025: குருநாகல் மாவட்டத்தில் அரச விளையாட்டுக் கட்டிடத்தொகுதி: விபரம்

511/2025
கௌரவ சுஜீவ திசாநாயக்க,— இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையிலுள்ள அரச விளையாட்டுக் கட்டிடத் தொகுதிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) குருநாகல் மாவட்டத்தில் அரச விளையாட்டுக் கட்டிடத் தொகுதியொன்று அமைக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், மேற்படி விளையாட்டுக் கட்டிடத் தொகுதி தாபிக்கப்பட்டுள்ள இடம் யாது;
(iv) மேற்படி விளையாட்டுக் கட்டிடத் தொகுதியை முதலில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டிருந்த இடம் யாது;
(v) இதனை வேறொரு இடத்தில் நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா;
(vi) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி விளையாட்டுக் கட்டிடத் தொகுதியில் வசதிகளை ஏற்பாடு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்த விளையாட்டுக்கள் யாவை;
(ii) மேற்படி விளையாட்டுக் கட்டிடத் தொகுதியில் இற்றைவரை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ள விளையாட்டுக்கள் யாவை;
(iii) மேற்படி விளையாட்டுக் கட்டிடத் தொகுதியை நிர்மாணிக்கவென மதிப்பீடு செய்யப்பட்டிருந்த தொகை யாது;
(iv) மேற்படி விளையாட்டுக் கட்டிடத் தொகுதியை பூரணமாக நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா;
(v) ஆமெனில், அதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் திகதி யாது;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-19

கேட்டவர்

கௌரவ சுஜீவ திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-03-19

பதில் அளித்தார்

கௌரவ சுனில் குமார கமகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks