E   |   සි   |  

 திகதி: 2025-04-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0500/2025: கண்டியில் புதிய சட்டத்தரணி அலுவலக நிர்மாணம்: விபரம்

500/2025
கௌரவ சட்டத்தரணி அநுராத ஜயரத்ன,— நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) கண்டி மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் சட்டத் தொழிற்துறையில் ஈடுபடும் புதிய சட்டத்தரணிகளுக்கான அலுவலகங்கள் இல்லாமையை அறிவாரா என்பதையும்;
(ii) அவ்வாறாயின், தற்போது கண்டி மாவட்டத்தில் அலுவலகங்களைக் கொண்டிராத சட்டத்தரணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நீதிமன்றம் வாரியாக வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
(iii) கண்டி, கெட்டம்பே பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டத்தரணிகள் அலுவலகக் கட்டடத்தொகுதிக்கு அயலிலுள்ள காணியில் புதிய சட்டத்தரணி களுக்கான அலுவலகமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
(iv) தற்போது மேற்படி நிர்மாணப் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளமையை அறிவாரா என்பதையும்;
(v) மேற்படி புதிய சட்டத்தரணிகளுக்கான அலுவலக நிர்மாணப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-22

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி அநுராத ஜயரத்ன, பா.உ.

அமைச்சு

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-20

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks