01

E   |   සි   |  

 திகதி: 2025-02-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0487/2025: Delay of pension of Mr. K.A. Nihal

487/2025

கௌரவ ரீ.கே. ஜயசுந்தர,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 1984.07.03 ஆம் திகதி முதல் 2020.03.18 ஆம் திகதி வரையில் மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள கஹதூவ ஆராச்சிகே நிஹால் என்பவரின் ஓய்வூதியத்தைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையால் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதையும்;

(ii) இவர் ஓய்வு பெற்று 5 வருடங்கள் கழிந்துள்ள போதிலும், இவரது ஓய்வூதியம் தொடர்பான பணிகளை நிறைவு செய்யாமை சுகாதார அமைச்சின் பலவீனம் என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) கராப்பிட்டிய வைத்தியசாலைப் பணிப்பாளரின் FQ/02/2018 இலக்கம் கொண்ட 2023.12.08 ஆம் திகதிய கடிதத்திற்கமைய நியமிக்கப்பட்டுள்ள பூர்வாங்க விசாரணைக் குழுவின் அறிக்கையினை ஏற்று, உரிய அறவீடுகளை மேற்கொண்டு, ஓய்வூதிய விடயங்களுக்காக ஆவணங்களை விடுவிக்காமல் இருப்பதற்கான காரணம் யாதென்பதையும்;

(ii) மேற்படி அறிக்கை தொடர்பில் நிஹால் அவர்களுக்கு அறிவிக்காமல் இருப்பதற்கான காரணம் யாதென்பதையும்;

(iii) மேலே (i)இல் குறிப்பிடப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை எனில், அதற்கான காரணம் யாதென்பதையும்;

(iv) அவ்வாறாயின், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

(v) மேற்படி நடவடிக்கைகள் குறித்து நிஹால் அவர்களுக்கு அறிவிக்காமல் இருப்பதற்கான காரணம் யாதென்பதையும்;

(vi) 2020 ஆம் ஆண்டு முதல் பார்க்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிஹால் அவர்களின் ஓய்வூதியத்தை தயார்படுத்துவதற்கு தாமதப்படுத்தும் அலுவலர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-20

கேட்டவர்

கௌரவ ரீ.கே. ஜயசுந்தர, பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks