பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
484/2025
கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்துள்ள அரபிக் கல்லூரிகளில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்குவதற்கான பயிற்சி நிலையமொன்று இல்லையென்பதையும்;
(ii) அதன் காரணமாக கற்பித்தல் நடவடிக்கைகளுக்குரிய முறையான பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்கான இயலுமை இல்லையென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) முஸ்லிம் பள்ளிவாசல்களில் சேவையாற்றும் இமாம்களுக்கும், முஅத்தின்களுக்கும் முறையான பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்கான பயிற்சி நிலையமொன்று இல்லையென்பதையும்;
(ii) அதன் காரணமாக அவர்கள் ஆற்றும் பணிகளுக்கான முறையான பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ளும் இயலுமை இல்லையென்பதையும்;
அவர் அறிவாரா?
(இ) அரபிக் கல்லூரிகளில் சேவையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களில் சேவையாற்றும் இமாம்கள் மற்றும் முஅத்தின்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்குவதற்கான பயிற்சி நிலையமொன்றை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-04-09
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பா.உ.
அமைச்சு
புத்தசாசன. சமய மற்றும் கலாசார அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-04-09
பதில் அளித்தார்
கௌரவ (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks