logo

02

E   |   සි   |  

 திகதி: 2025-02-28   பதிலளிக்கப்பட்டவைகள் 

0432/2025: புத்தளம் மாவட்டத்தில் மணல், சரளைக் கற்கள், மண் மற்றும் குளங்களின் அகழ்வு நடவடிக்கைகள்: ஒழுங்குபடுத்தல்

432/2025
கௌரவ அஜித் கிஹான்,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) புத்தளம் மாவட்டத்தில் சட்டரீதியான உரிமங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் மணல், சரளைக் கற்கள், மண் மற்றும் குளங்களை அகழ்தல் போன்ற நடவடிக்கைகள் தரநிலைகளுக்கு புறம்பாக மேற்கொள்ளப்படுவதால் அதிகளவிலான சுற்றாடல் அழிவுகள் இடம்பெற்று வருகின்றமையை அறிவாரா என்பதையும்;
(ii) மேற்படி அகழ்வு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான முறையியல் ஒன்று உருவாக்கப்படுமா என்பதையும்;
(iii) மணல், சரளைக் கற்கள், மண் மற்றும் குளங்களை அகழ்தல் போன்ற நடவடிக்கைகளுக்காகவும் மற்றும் அதற்கான போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பாகவும் புதிய முறையியலொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) ஆமெனில், அந்த முறையியல் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) வடமேல் மாகாணத்தில் பாரிய அளவில் சுற்றாடல் அழிவுக்குள்ளாக்கப்பட்டு வரும் நிலையில் வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபையின் தலையீடுகள் யாவையென்பதையும்;
(ii) மேற்படி அதிகாரசபையின் பொறுப்புக்கள் யாவையென்பதையும்;
(iii) வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபையை தொடர்ந்தும் நடாத்திச்செல்ல வேண்டிய தேவை உள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-28

கேட்டவர்

கௌரவ அஜித் கிஹான், பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-09

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks