logo

02

E   |   සි   |  

 திகதி: 2025-04-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0430/2025: திருகோணமலை மாவட்டத்திலுள்ள மக்கெய்சர் விளையாட்டு மைதானம்: அபிவிருத்தி

430/2025
கௌரவ இம்ரான் மகரூப்,— இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தேசிய மட்டத்திலான விளையாட்டு மைதானங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) அத்தகைய மைதானம் ஒவ்வொன்றும் அமைந்துள்ள இடம் வெவ்வேறாக யாது என்பதையும்;
(iii) திருகோணமலை மாவட்டத்திலுள்ள மக்கெய்சர் (MC Heyzer Stadium) விளையாட்டு மைதானத்தை தேசிய மட்டத்திலான விளையாட்டு மைதானமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, அதற்குத் தேவையான அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதால் அந்த அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்டதை அறிவாரா என்பதையும்;
(iv) இடைநிறுத்தப்பட்டுள்ள அகழ்வுப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) மேற்குறிப்பிட்ட மக்கெய்சர் மைதானத்தை சர்வதேச கிரிக்கெட் மைதானமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-22

கேட்டவர்

கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.

அமைச்சு

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-09

பதில் அளித்தார்

கௌரவ சுனில் குமார கமகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks