E   |   සි   |  

 திகதி: 2026-05-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0363/2026: மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி மற்றும் பாலையடிவட்டை தபால் அலுவலகங்கள்: விபரம்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)   (i)      மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை தெற்கு, எருவில்பற்று பிரதேச செயலகப் பிரிவின் மாங்காடு பிரதேசத்தில் தபால் அலுவலகமொன்று இல்லாதிருப்பதனால் குறித்த பிரதேச மக்கள் சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள செட்டிபாளையம் தபால் அலுவலகத்திற்குச் ​செல்வதை அறிவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், மாங்காடு பிரதேசத்தில் தபால் அலுவலகமொன்றை  அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) தனியார் கட்டிடத்தில் அமைந்துள்ள களுவாஞ்சிக்குடி தபால் அலுவலகத்தில் போதிய வசதிகள் இல்லை என்பதை அறிவாரா;

(ii) தபால் திணைக்களத்திற்குச் சொந்தமான கட்டிடம் இன்றளவில் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதை அறிவாரா;

(iii) ஆமெனில், மேற்படி கட்டிடத்தை புனரமைத்து தபால் திணைக்களத்திற்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா;

என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) போரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள, பாலையடிவட்டை கிராமத்திலுள்ள தபால் அலுவலகம் அமைந்துள்ள காணியின் ஒரு பகுதி இதுவரை இராணுவத்திடம் உள்ளதை அறிவாரா;

(ii) ஆமெனில், மேற்படி காணியை இராணுவத்திடமிருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா;

என்பதை மேலும் அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-05-19

கேட்டவர்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-05-19

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) (செல்வி) கெளஷல்யா ஆரியரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks