E   |   සි   |  

 திகதி: 2025-04-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0335/2025: குரக்கன்ஹேனேகெதர குடிநீர் கருத்திட்டம்: முன்னேற்றம்

335/2024
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) குருநாகல் மாவட்டத்தில் கட்டுபொத்த 'குரக்கன்ஹேனேகெதர குடிநீர் கருத்திட்டம்' என்ற பெயரில் சமுதாய நீர்வழங்கல் கருத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டதை அறிவாரா என்பதையும்;
(ii) மேற்படி கருத்திட்டத்தின் பூர்வாங்கப் பணிகளுக்கா௧ச் செலவிடப்பட்ட தொகை யாதென்பதையும்;
(iii) மேற்படி கருத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்;
(iv) மேற்படி பிரதேசத்திலுள்ள வைத்தியசாலையையும், குரக்கன்ஹேனேகெதர, சபுமல்புரய, தங்கொல்ல மற்றும் கட்டுபொத்த ஆகிய பிரதேசங்களிலுள்ள 700 இற்கும் மேற்பட்ட குடும்ப அலகுகளிலுள்ள மக்களை உள்வாங்கும் வகையில் மேற்படி கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அறிவாரா என்பதையும்;
(v) தற்போது மேற்படி கருத்திட்டம் முழுமையாக செயலிழந்துள்ளமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(vi) மேற்படி கருத்திட்டத்தைத் துரிதமாக நடைமுறைப்படுத்தி மேற்குறிப்பிடப்பட்ட மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(vii) ஆமெனில், அது ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-11

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-08

பதில் அளித்தார்

கௌரவ அனுர கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks