04

E   |   සි   |  

 திகதி: 2025-01-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0322/2025: Difficulties faced by foreign workers in renewing their driving licenses

322/2024

கௌரவ அஜித் கிஹான்,— வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) புத்தளம் மாவட்டத்திலுள்ள அதிகமானோர் இத்தாலியில் தொழில் புரிவதோடு அவர்களது சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொள்ள இயலாதுள்ளமை முக்கியமானதொரு பிரச்சினையாக மாறியுள்ளது என்பதை அவர் அறிவாரா;

(ii) ஆமெனில், அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;

(iii) வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள இலங்கைப் பணியாளர்கள் மனிதாபிமானமற்ற சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பதை அறிவாரா;

(iv) ஆமெனில், அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;

(v) வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக உறுதியளித்து பணமோசடி செய்கின்ற நிறுவனங்கள்/நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;

(vi) மோசடி செய்துள்ள பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-24

கேட்டவர்

கௌரவ அஜித் கிஹான், பா.உ.

அமைச்சு

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks