04

E   |   සි   |  

 திகதி: 2025-01-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0318/2025: 2016.01.01 முதல் 2019.12.31 வரை ஓய்வுபெற்றோரினது ஓய்வூதியம்: திருத்தங்கள் இடைநிறுத்தம்

318/2024

கௌரவ (டாக்டர்) பத்மநாதன் சத்தியலிங்கம்,— பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பொ/நி/சு 03/2016 இன் சம்பள அளவுத் திட்டம் 2020.01.01 ஆம் திகதி தொடக்கம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 2016.01.01 ஆம் திகதி தொடக்கம் 2019.12.31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஓய்வெடுக்கச் செய்யப்பட்ட ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமானது அதற்கேற்ப திருத்தப்பட்டது என்பதையும்;

(ii) 2019.11.11 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் 35/2019 ஆம் இலக்க பொ/நி/சுற்றறிக்கை வெளியிடப்பட்டது என்பதையும்;

(iii) 2020.01.02 ஆம் திகதி அதனைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கான அமைச்சரவைத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என்பதையும்;

(iv) இதன் காரணமாக 2016.01.01 ஆம் திகதி தொடக்கம் 2019.12.31 ஆம் திகதி வரை ஓய்வெடுக்கச் செய்யப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு 2020.01.01 ஆம் திகதி தொடக்கம் கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் கிடைக்காததால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) 2020.01.02 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தை இரத்துச் செய்து 2019.11.11 ஆம் திகதிய தீர்மானத்தை பயனுறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

(ii) 2020.01.01 ஆம் திகதி தொடக்கம் கிடைக்க வேண்டிய ஓய்வூதியத்தை 2025 ஆம் ஆண்டிலிருந்து செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

(iii) ஆமெனில், அதற்காக 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட வேண்டிய நிதி எவ்வளவு என்பதையும்;

(iv) மேற்படி (அ)(iv) இன் பிரகாரம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(v) இவர்களில் மரணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-21

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) பத்மநாதன் சத்தியலிங்கம், பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-01-21

பதில் அளித்தார்

கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks