logo

02

E   |   සි   |  

 திகதி: 2026-06-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0308/2026: 2015 முதல் பண்டங்களின் ஏற்றுமதியும் இறக்குமதியும்: வருமானமும் செலவினமும்

308/2024
கௌரவ ரவி கருணாநாயக்க,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2015 முதல் இன்று வரை —
(i) பண்டங்களின் ஏற்றுமதிப் பெறுமதி மற்றும் அதிலிருந்து கிடைத்த வருமானம் யாதென்பதையும்;
(ii) பண்டங்களின் இறக்குமதிப் பெறுமதி மற்றும் அதன் மீதான செலவினம் யாதென்பதையும்;
(iii) வர்த்தக மீதி எவ்வளவு என்பதையும்;
(iv) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக ஏற்றுமதிகளின் பெறுமதி யாதென்பதையும்;
இலங்கை ரூபா மற்றும் அமெரிக்க டொலர்களில், வெவ்வேறாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) 2015 முதல் இன்று வரை —
(i) 10 பிரதான வகுதிகளைச் சுட்டிக்காட்டி, சேவைத் துறையிலிருந்து பெற்ற ஏற்றுமதி வருமானங்கள் யாவை என்பதையும்;
(ii) வெளிநாட்டுச் சேவைகளுக்கான கொடுப்பனவுகளின் பெறுமதி யாதென்பதையும்;
(iii) சேவைகள் வர்த்தக மீதி எவ்வளவு என்பதையும்;
(iv) மொத்தத் உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக சேவைகளின் பங்களிப்பு யாதென்பதையும்;
(v) சென்மதி நிலுவை மிகை அல்லது துண்டுவிழும் தொகை யாதென்பதையும்;
இலங்கை ரூபா மற்றும் அமெரிக்க டொலர்களில், வெவ்வேறாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) சென்மதி நிலுவை துண்டுவிழும் தொகையைக் குறைப்பதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ள துறைகள் யாவை என்பதையும்;
(ii) (அ)(i) இல் குறிப்பிடப்பட்டுள்ள 15 ஏற்றுமதிப் பண்டங்கள் யாவை என்பதையும்;
(iii) கடந்த 10 ஆண்டுகளில், நாட்டிற்கு மீள அனுப்பப்படாது வெளிநாடுகளில் வைக்கப்பட்டுள்ள ஏற்றுமதி வருமானத்தின் பெறுமதி வெவ்வேறாக யாதென்பதையும்;
(iv) அவ்வாறு வைத்திருப்பதற்கு அனுமதிக்கப்பட்ட காலப்பகுதி யாதென்பதையும்;
அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-06-26

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-06-26

பதில் அளித்தார்

கௌரவ நிசான்த ஜயவீர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks