E   |   සි   |  

 திகதி: 2025-04-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0306/2025: மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்றும் பண்டங்கள், சேவைகளின் ஏற்றுமதி: விபரம்

306/2024
கௌரவ ரவி கருணாநாயக்க, — நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மொத்தப் பெறுமதியை இலங்கை ரூபா (SLR) மற்றும் ஐக்கிய அமெரிக்க டொலர்களிலும் (USD) மற்றும் கடந்த 20 வருடங்களுக்கான வளர்ச்சி வீதம் யாதென்பதை வெவ்வேறாகவும்;
(ii) எதிர்வரும் 5 வருடங்களுக்கு எதிர்பார்க்கப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்றும் கணிப்பிடப்பட்ட வளர்ச்சி வீதம் யாதென்பதை வெவ்வேறாகவும்;
(iii) கடந்த 20 வருடங்களுக்கான ஏற்றுமதிகளின் மொத்தப் பெறுமதியை இலங்கை ரூபா மற்றும் ஐக்கிய அமெரிக்க டொலர்களிலும் மற்றும் மொத்தத் தேசிய உற்பத்தியில் அதன் சதவீதம் யாதென்பதை வெவ்வேறாகவும்;
(iv) இலங்கையில் முதல் 20 இடங்களில் காணப்படும் ஏற்றுமதிப் பண்டங்கள் யாதென்பதையும்;
(v) கடந்த 10 ஆண்டுகளாக சேவைகளிலிருந்து கிடைக்கப் பெற்ற மொத்த வருமானத் தொகை ஐக்கிய அமொிக்க டொலர்களின் யாதென்பதை வெவ்வேறாகவும்;
(vi) இலங்கைக்கு ஐக்கிய அமெரிக்க டொலர்களை ஈட்டித்தந்த முதல் பத்து சேவைத் துறைகள் யாதென்பதை வெவ்வேறாகவும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) வெளிநாடுகளில் வைக்கப்பட்டுள்ள சம்பாதிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்க டொலர்களின் தொகை யாதென்பதையும்;
(ii) வெளிநாடுகளில் ஐக்கிய அமெரிக்க டொலரினை உத்தியோகபூர்வமாகத் தக்கவைத்துக்கொள்வதற்கான சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட காலஎல்லை யாதென்பதையும்;
(iii) செலாவணிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளை மீறி வெளிநாடுகளில் பணத்தை தக்கவைத்திருக்கும் தனியாட்கள் அல்லது நிறுவனங்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு மேலும் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-11

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-08

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks