E   |   සි   |  

 திகதி: 2025-03-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0294/2025: வெள்ள அபாயமுள்ள ஆறுகள் மற்றும் ஓடைகள்: வெள்ளத்தைக் குறைப்பதற்கான கருத்திட்டங்கள்

294/2024
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) தொடர்ச்சியாக வெள்ளப் பெருக்கு இடர்வரவு காணப்படுகின்ற ஆறுகள் மற்றும் ஓடைகள் யாவையென்பதையும்;
(ii) அவற்றின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இன்றளவில் செயற்படுத்தப்பட்டுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கருத்திட்டங்கள் யாவையென்பதையும்;
(iii) அத்தகைய கருத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியளவு வெவ்வேறாக யாதென்பதையும்;
(iv) மேற்படி கருத்திட்டங்களுக்காக நிதி வழங்கிய நிறுவனங்கள் யாவையென்பதையும்;
(v) மேற்படி கருத்திட்டங்களில் பல்வேறு தடைகள் காரணமாகத் தோல்வியடைந்த கருத்திட்டங்கள் உள்ளனவா என்பதையும்;
(vi) ஆமெனில், அக்கருத்திட்டங்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-21

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-23

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks