01

E   |   සි   |  

 திகதி: 2025-02-28   பதிலளிக்கப்பட்டவைகள் 

0258/2025: காலி துறைமுகப் பிரதேசத்தில் உத்தேச "துறைமுக நகரம்" கருத்திட்டம்: சுற்றாடல் மற்றும் சமூகத்தின் மீதான தாக்கம்

258/2024

கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) காலி துறைமுகப் பிரதேசத்தை அண்மித்ததாக நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 'துறைமுக நகரம்' கருத்திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படும் நன்மைகள் யாவை;

(ii) மேற்படி கருத்திட்டத்தினால் ஏற்படும் சூழல் தாக்கம் குறித்து சாத்தியவள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதா;

(iii) இதற்கு முன்னர் பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த எதிர்ப்பின் விளைவாக மேற்படி கருத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் யாவை;

(iv) உத்தேச கருத்திட்டம் காரணமாக மக்களது வாழ்க்கையில் ஏற்படும் தாக்கம் குறித்து கருத்திற் கொள்ளப்பட்டுள்ளதா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-28

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-02-28

பதில் அளித்தார்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks