பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
249/2024
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொவிட்- 19 காரணமாக இறந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்வது தொடர்பில் ஆராய்வதற்கான "நிபுணர்கள் குழு " ஒன்றின் மூலம் சுகாதார அமைச்சின் கொள்கைத் தீர்மானம் தவறாக வழிநடத்தப்பட்டதாக 2022.11.29 அன்று சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சரினால் வெளியிடப்பட்ட கூற்றுடன் சுகாதார அமைச்சர் உடன்படுகின்றாரா? என்பதையும்;
(ii) மேற்குறிப்பிடப்பட்ட குழு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) மேற்படி குழு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவாக இருந்தால் —
(i) குறிப்பாக கொவிட் -19 காரணமாக மரணித்த உடல்களை அகற்றுவதற்கான அதன் விதப்புரைகளையும்;
(ii) நியமிக்கும் அதிகாரியையும்;
(iii) விசாரணை நியதிகள் மற்றும் /அல்லது ஆணையையும்;
(iv) உறுப்பினர்களின் பெயர்களையும் மற்றும் பதவிகளையும்;
(v) தவிசாளரின் பெயரையும்;
(vi) அது தொடர்ச்சியாகக் கூடுகின்றதா என்பதையும்;
(vii) இல்லையெனில்; அது கடைசியாகக் கூடிய திகதியையும்;
(viii) இதுவரையில் நடைபெற்றுள்ள கூட்டங்களின் எண்ணிக்கையையும்;
(ix) கூட்டங்கள் நடைபெற்ற இடத்தையும்;
(x) ஒவ்வொரு கூட்டத்திற்கும் தலைமை வகித்த நபர்களின் பெயர்களை வெவ்வேறாகவும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-01-10
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.
அமைச்சு
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2025-02-05
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks