பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
247/2024
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 'COVID-19 சந்தேகத்திற்கிடமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளி களுக்கான சிகிச்சைக்குரிய நடைமுறை வழிகாட்டுதல்கள்' தொடர்பான வெளியீட்டினைப் பற்றி அவர் அறிவாரா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி வெளியீட்டின் உள்ளடக்கத்திற்கும் விதப்புரைகளுக்கும் பங்களித்த துறைசார் வல்லுனர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
(iii) அவர்கள் துறைசார் வளவாளர்களாகப் பணியாற்றும் போது அவர்கள் இணைக்கப்பட்டிருந்த நிறுவனங்கள் மற்றும் பதவிகள் யாவை என்பதையும்;
(iv) அவர்களை நியமிப்பதற்குப் பொறுப்புடைய அதிகாரி யார் என்பதையும்;
(v) அவர்களைத் தெரிவு செய்வதற்குப் பின்பற்றப்பட்ட அளவுகோல்கள் அல்லது அடிப்படைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி வெளியீட்டின் பிரிவு 7 தொடர்பில் அவர் அறிந்திருக்கின்றாரா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்குறிப்பிட்ட பிரிவின் உள்ளடக்கத்திற்கும் விதப்புரைகளுக்கும் பொறுப்பான குறிப்பிட்ட துறைசார் வல்லுனர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
(iii) பிரிவு 7 இன் உள்ளடக்கத்தினையும் விதப்புரைகளினையும் உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட செயன்முறை, ஆவணங்கள் மற்றும் உசாத்துணைகள் என்பவற்றினை வெவ்வேறாக யாவை என்பதையும்;
(iv) பிரிவு 7 இல் காணப்படும் விதப்புரைகள் உள்நாட்டு அல்லது சர்வதேச மருத்துவ நெறிகள் மற்றும் மருத்துவ மானுடவியல் துறையிலுள்ள நிபுணர்களின் தொழில்சார் அபிப்பிராயத்திற்கு உட்படுத்தப்பட்டதா;
என்பதையும் அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-01-09
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.
அமைச்சு
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2025-02-18
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks