E   |   සි   |  

 திகதி: 2025-04-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0157/2025: 2024 நவம்பர் மாதம் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பயிர்ச்சேதம்: நட்டஈடு

157/2024
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்த மொத்த விளைநிலங்களின் அளவு யாதென்பதையும்;
(ii) மேற்படி விளைநிலங்களின் அளவு, நெற் காணிகள், சோளம் மற்றும் ஏனைய விளைநிலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(iii) விளைநிலங்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பீடு செய்யப்பட்ட நிதிசார் நட்டம் எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) சேதமடைந்த விளை நிலங்களுக்காக செலுத்தப்பட்ட மொத்த நட்டயீட்டுத் தொகை எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்படி நட்டயீட்டுத் தொகை நெற் காணிகள், சோளம் மற்றும் ஏனைய பயிர்கள் என்ற அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(iii) இதுவரையிலும் நட்டயீட்டுத் தொகை செலுத்தப்படாத விளை நிலங்களின் அளவு யாதென்பதையும்;
(iv) அவற்றுக்கு நட்டயீடு செலுத்தாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-24

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-23

பதில் அளித்தார்

கௌரவ நாமல் கருணாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks