E   |   සි   |  

 திகதி: 2025-04-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0156/2025: 2024 நவம்பரில் வட-கிழக்குப் பகுதிகளில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல்கள்: விபரம்

156/2024
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர,— பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2024 நவம்பர் மாதத்தில் எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பு, வேறேதேனும் அமைப்பு, எவரேனும் நபர் அல்லது நபர்கள் வடக்கு – கிழக்கு யுத்தத்தில் உயிரிழந்த எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பின் உறுப்பினர்களை நினைவுகூறும் வகையில் மாவீரர் நினைவேந்தல்களை நடாத்தியுள்ளார்களா;
(ii) ஆமெனில், அவற்றை நடாத்திய தரப்பினர்கள் யாவர்;
(iii) அதற்கு அரச அனுசரணை வழங்கப்பட்டுள்ளதா;
(iv) மேற்படி நினைவேந்தல்கள் நடாத்தப்படுவதற்கு முன்னர் அது தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்ததா;
(v) இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியாகவும் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பொன்றுக்கு இலங்கையில் அவ்வாறான நினைவேந்தல்களை நடாத்தும் இயலுமை உள்ளதா;
(vi) மேற்படி நினைவேந்தல்கள் நடாத்தப்படுவதை நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாது;
(vii) தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பு நினைவேந்தல் நடாத்தியமை தொடர்பில் அரசு பொறுப்பினை ஏற்றுக்கொள்கின்றதா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-11

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-08

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks