E   |   සි   |  

 திகதி: 2025-03-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

0074/2025: மட்டக்களப்பு, பளுகாமம் தபால் அலுவலகம்: நிரந்தரக் கட்டிடத்தைப் பெற்றுக்கொடுத்தல்

74/2024

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தில், போரதீவுபற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உரித்தான பளுகாமம் பிரதேசத்தில் அமைந்துள்ள தபால் அலுவலகத்திற்கு நிரந்தரக் கட்டிடமொன்று இல்லையென்பதுடன் மேற்படி தபால் அலுவலகம் தற்காலிக கட்டிடமொன்றில் பேணிவரப்படுகின்றது என்பதை அவர் அறிவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி தபால் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டிடமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

(iii) அக்கட்டிடம் நிர்மாணிக்கப்படும் காலப்பகுதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-12

கேட்டவர்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-06-06

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks