பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
72/2024
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் மட்/காயன்குடா கண்ணகி கல்லூரி மற்றும் கல்குடா கல்வி வலயத்தின் மட்/கோரகல்லிமடு ஸ்ரீ ரமண மஹரிஷி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் IC வகையைச் சேர்ந்த பாடசாலைகள் என்பதையும்;
(ii) மட்/காயன்குடி கண்ணகி கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் எல்லே விளையாட்டில் தேசிய மட்டத்தில் முதலிடத்தையும், மட்/கோரகல்லிமடு ஸ்ரீ ரமண மஹரிஷி வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவிகள் கபடி விளையாட்டில் தேசிய மட்டத்தில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்கள் என்பதையும்;
(iii) எனினும், மேற்படி பாடசாலைகளுக்கு இதுவரையில் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) ஆமெனில், மேற்குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-04-23
கேட்டவர்
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.
அமைச்சு
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-05-23
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks