E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0031/2026: Importation of Rice through Sathosa

31/2024
கௌரவ சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையில் இலங்கையில் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் எத்தனை என்பதையும்;
(ii) மேற்படி சந்தர்ப்பங்களின் போது வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனம் அரிசியை இறக்குமதி செய்த சந்தர்ப்பங்களின் எண்ணிக்கை மற்றும் மேற்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் அளவு வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(iii) அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி, சதொச நிறுவனத்தினூடாக வேறு நபர்களுக்கும் வியாபாரிகளுக்கும் சட்டத்திற்கு முரணான வகையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) ஆமெனில், அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-04

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks