03

E   |   සි   |  

 திகதி: 2025-01-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0004/2025: அரச நிறுவனங்கள்: பாதுகாப்பு வழங்கும் கம்பனிகள்

4/2024

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)     இலங்கையில் தற்பொழுதுள்ள அமைச்சுக்கள், திணைக்களங்கள், நியதிச் சட்ட சபைகள் உள்ளிட்ட மொத்த அரச நிறுவனங்களின் எண்ணிக்கை எத்தனை;

           (ii)    மேற்படி ஒவ்வொரு நிறுவனத்திலும் பாதுகாப்புச் சேவைகளை வழங்குகின்ற பாதுகாப்புக் கம்பனிகளின் பெயர்கள் யாவை;

(iii) அவற்றுள் அரச கம்பனிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் யாவை;

(iv) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையில் மேற்படி ஒவ்வொரு அரச நிறுவனத்தினதும் பாதுகாப்புச் சேவைக்காக தனியார் பாதுகாப்புக் கம்பனிகளுக்கு செலுத்தப்பட்ட பணத்தொகை ஒவ்வொரு கம்பனியின் அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) அரச நிறுவனங்களுக்கு பாதுகாப்பை வழங்குவது தொடர்பான ஒப்பந்தங்களைப் பெறுகின்றபோது மோசடி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது என்பதை அவர் அறிவாரா;

(ii) ஆமெனில், அரச நிறுவனங்களுக்கு பாதுகாப்புச் சேவை வழங்கும் செயற்பாட்டை அரசிற்குரிய பாதுகாப்புக் கம்பனிகளுக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2025-01-10

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-03-20

பதில் அளித்தார்

கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks