04

E   |   සි   |  

 திகதி: 2012-11-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

2531/2012: பேராசிரியர் பிரிவுகளைக்கொண்ட மருத்துவமனைகள்: விபரம்

2531/ ’12

கெளரவ அனுர திசாநாயக்க,— உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இலங்கையில் மருத்துவப் பீடங்களின் சிகிச்சை பயிற்சிக்கான பேராசிரியர் பிரிவுகளை (Professor unit) கொண்டுள்ள மருத்துவமனைகள் யாவையென்பதையும்;

(ii) மேற்படி ஒவ்வொரு பேராசிரியர் பிரிவுக்கும் 2012 மார்ச் மாதம் 31 ஆம் திகதியளவில் இணைக்கப்பட்டிருந்த பேராசிரியர்கள், நிபுணத்துவ மருத்துவர்கள், பட்டப்பின் படிப்பை மேற்கொள்ளும் மருத்துவர்கள் (Senior Registrar மற்றும் Registrar), சிரேஷ்ட மருத்துவ உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி ஒவ்வொரு பேராசிரியர் பிரிவுகளினதும் அலுவல்களுக்காக காணப்படும் சத்திரசிகிச்சை கூடங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) ரஜரட்ட மருத்துவ பீடத்தின் சிகிச்சைப் பயிற்சிக்கான அனுராதபுரம் பெரியாஸ்பத்திரியின் பேராசிரியர் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

(ii) தற்போது மேற்படி பேராசிரியர் பிரிவில் பயிற்சி பெறும் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(iii) அங்கு பயிற்சி பெறும் மருத்துவ மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு போதுமான மருத்துவர்கள், சத்திர சிகிச்சைக் கூடங்கள், வாட்டுகள் மற்றும் அவற்றை கொண்டு நடாத்துவதற்கு தேவையான பணியாட்டொகுதியினர் மற்றும் உபகரணங்கள் உள்ளதா என்பதையும்;

(iv) இன்றேல், மேற்படி அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-11-10

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

உயர் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු එස්.බී. දිසානායක මහතා

(மாண்புமிகு எஸ்.பி. திசாநாயக்க)

(The Hon. S.B. Dissanayake)

ගරු කථානායකතුමනි, මම එම ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.

(අ)          (i)      අනුරාධපුර ශික්ෂණ රෝහල;

                         කොළඹ ජාතික ශික්ෂණ රෝහල;

                         කරාපිටිය ශික්ෂණ රෝහල;

                         උතුරු කොළඹ ශික්ෂණ රෝහල;

                         දකුණු කොළඹ ශික්ෂණ රෝහල;

                         පේරාදෙණිය ශික්ෂණ රෝහල‍‍.

යාපනය රෝහල ශික්ෂණ රෝහලක තත්ත්වයට තවම දියුණු වෙලා නැහැ. නමුත් මහාචාර්ය ඒකකයක් ක්‍රියාත්මක වෙනවා. මඩකලපුවේ තවම මහාචාර්ය ඒකකයක් ක්‍රියාත්මක වෙන්නේ නැහැ. ඒක හදාගෙන යනවා. හැබැයි එතැන ශික්ෂණ රෝහලක් හැටියට කටයුතු කරනවා.

(ii) ඇමුණුම I හි දක්වා ඇත.

(iii) ඇමුණුම II හි දක්වා ඇත. ඇමුණුම් සභාගත* කරමි.

(ආ) (i) 2012 පෙබරවාරි 09.

(ii) 167 යි.

(iii) ඔව්.

(ඇ)     පැන නොනඟී.

 

பதில் தேதி

2013-04-09

பதில் அளித்தார்

கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks