01

E   |   සි   |  

 திகதி: 2013-06-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

2519/2013: கலேவத்த, தேசிய மொழிகள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் : நிதி மோசடி

2519/ ’12

கெளரவ புத்திக பதிரண,— தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாட்டு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கலேவத்த எனுமிடத்தில் பேணிவரப்படுகின்ற தேசிய மொழிகள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மேற்படி நிறுவனத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டமை சம்பந்தமாக சனாதிபதி புலனாய்வுப் பிரிவினால் விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதென்பதையும்;

(ii) மேற்படி விசாரணைகளின் போது இவர் நிதி மோசடியில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென்பது சனாதிபதி செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) நிதி மோசடி சம்பந்தமாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை தொடர்ந்தும் அதே நிறுவனத்தில் சேவையில் ஈடுபடுத்துதல் ஒட்டு மொத்தமான அரச சேவையும் சீரழிவுக்கு உள்ளாக்குவதற்கு காரணமாக அமையும் என்பதை அவர் கொள்வாரா? 

(இ) (i) ஆமெனில், இவரை சேவையிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்

அவர் இச் சபையில் அறிவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-06-19

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாட்டு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු වාසුදේව නානායක්කාර මහතා

(மாண்புமிகு வாசுதேவ நாணாயக்கார)

(The Hon. Vasudeva Nanayakkara)

ගරු කථානායකතුමනි, එම ප්‍රශ්නයට පිළිතුර මෙසේය.

(අ)          (i)       ඔව්.

              (ii)       ඔව්.

(ආ)     නැත.

(ඇ)         (i)       නැත.

(ඇ)       (ii)       පැන නොනඟී.

(ඈ)     පැන නොනඟී.

 

பதில் தேதி

2013-06-19

பதில் அளித்தார்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks