01

E   |   සි   |  

 திகதி: 2023-10-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

3678/2023: Retirement of officers of Principals, Teacher Instructors and Teachers

3678/2023

கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 1997.01.01 ஆம் திகதி தொடக்கம் 2019.12.31 ஆம் திகதி வரை ஓய்வுபெறச் செய்யப்பட்ட;

(ii) 2020.01.01 ஆம் திகதி தொடக்கம் 2020.12.31 ஆம் திகதி வரை ஓய்வுபெறச் செய்யப்பட்ட;

(iii) 2021.01.01 ஆம் திகதி தொடக்கம் 2021.12.31 ஆம் திகதி வரை ஓய்வுபெறச் செய்யப்பட்ட;

(iv) 1997.01.01 ஆம் திகதி தொடக்கம் 2021.12.31 ஆம் திகதி வரை ஓய்வுபெறச் செய்யப்பட்டதன் பின்னர் 2021.12.31 ஆம் திகதியளவில் மரணமடைந்துள்ள;

இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்த அலுவலர்களின் எண்ணிக்கையினை ஒவ்வொரு சேவைக்கமைவாக வெவ்வேறாக எத்தனையென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) 1997.01.01 ஆம் திகதி தொடக்கம் 2021.12.31 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் விதவைகள் அநாதைகள் / தபுதாரர் அநாதைகள் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொண்ட ஆட்களின் எண்ணிக்கை மேற்குறித்த ஒவ்வொரு சேவை மற்றும் ஒவ்வொரு வருடத்தின் அடிப்படையில் வெவ்வேறாக எத்தனை என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-06

கேட்டவர்

கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks