04

E   |   සි   |  

 திகதி: 2023-07-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

3350/2023: Receipt of complaints against the oversear of Lady Ridgeway Hospital

3350/2023

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இன்றளவில் பணியாற்றுகின்ற பிரதான சிற்றூழியர் மேற்பார்வையாளர் 16 வருடங்களுக்கும் அதிகமான காலம் மேற்படி வைத்தியசாலையில் பணியாற்றுகின்றார் என்பதையும்;

(ii) அவரால் மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறுபட்ட ஒழுங்கீனச் செயற்பாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளை இடை நடுவில் நிறுத்துவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(ii) மேற்படி பணியாளர் தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(iii) அவரால் மேற்கொள்ளப்படுகின்ற முறைகேடுகளையும் ஒழுங்கீனச் செயற்பாடுகளையும் தடுத்து நிறுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-07-21

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks