04

E   |   සි   |  

 திகதி: 2023-06-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

3316/2023: Covid-19 Vaccination programme

3316/2023

கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசி வகைகள் யாவையென்பதையும்;

           (ii)    இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையானது ஒவ்வொரு தடுப்பூசி வகைக்கமைவாக தனித்தனியாக எத்தனையென்பதையும்;

(iii) மேற்படி தடுப்பூசி வகைகளை உற்பத்திசெய்த நாடுகள் யாவையென்பதையும்;

(iv) மேற்படி தடுப்பூசிகளை இறக்குமதி செய்த நிறுவனங்கள் யாவையென்பதையும்;

(v) தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்கையில் முறையான பெறுகை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டனவா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) முதலாவது, இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது மாத்திரைகளுக்காக பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையானது ஒவ்வொரு தடுப்பூசி வகைக்கமைவாக தனித்தனியாக எத்தனை என்பதையும்;

(ii) மேற்படி (அ)(i) இல் குறிப்பிடப்பட்டுள்ள தடுப்பூசி வகைகள் முழுமையாக பயன்படுத்தப்பட்டனவா என்பதையும்;

(iii) எஞ்சியிருப்பின், அவ் எண்ணிக்கையானது ஒவ்வொரு தடுப்பூசி வகைக்கமைவாக தனித்தனியாக எத்தனையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) உரிய தடுப்பூசி மாத்திரைகளைப் பெற்றுக்கொண்ட ஆட்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டதா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி ஆட்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?


 

கேட்கப்பட்ட திகதி

2023-06-22

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks