01

E   |   සි   |  

 திகதி: 2023-05-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

3268/2023: Establishment of a database for the properties in Muslim religious places

3268/2023

கௌரவ எம். எஸ். தௌபீக்,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வக்பு பிரிவானது முஸ்லிம் பள்ளிவாசல்கள், தக்கியாக்கள், ஸாவியாக்கள் மற்றும் தர்காக்கள் உட்பட அறக்கொடை நிறுவனங்களுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் தொடர்பான தரவுத் தளமொன்றைப் பேணிச் செல்லாமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;

(ii) அவ்வாறு தரவுத் தளமொன்றை பேணிச் செல்லாமை காரணமாக மேற்படி நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்கள், தனிப்பட்ட சொத்துக்களாகப் பயன்படுத்துதல் மற்றும் வக்பு சபைக்குத் தெரியாமல் மேற்படி சொத்துக்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல் போன்ற ஊழல்களும் முறைகேடுகளும் இடம்பெறுகின்றன என்பதை அறிவாரா என்பதையும்;

(iii) மேற்படி ஊழல்களையும் முறைகேடுகளையும் தடுப்பதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கையாக மேற்குறித்த சொத்துக்கள் தொடர்பில் முறையான தரவுத் தளமொன்றை அமைப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-25

கேட்டவர்

கௌரவ எம். எஸ். தௌபீக், பா.உ.

அமைச்சு

புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks