01

E   |   සි   |  

 திகதி: 2023-09-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

3173/2023: அரசாங்கத்தால் பராமரிக்கப்படும் அரிசி கையிருப்பு: விபரம்

3173/2023

கௌரவ தயாசிறி ஜயசேக்கர,— வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) அரசாங்கத்தினால் வருடாந்தம் பேணிச் செல்லப்பட வேண்டிய அரிசி கையிருப்பு யாதென்பதையும்;

(ii) அக்கையிருப்பைப் பேணி வரும் நிறுவனம் யாதென்பதையும்;

(iii) கையிருப்பைப் பேணுவதற்காக அரிசியைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தினால் பேணிவரப்பட்ட அரிசி கையிருப்பானது ஒவ்வொரு வருடத்தின் அடிப்படையில் தனித்தனியே யாதென்பதையும்;

(ii) மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் குறித்த அரிசி கையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட அரிசியின் அளவானது ஒவ்வொரு வருடத்தின் அடிப்படையில் தனித்தனியே யாதென்பதையும்;

(iii) மேற்குறிப்பிட்ட அரிசி கையிருப்பிலிருந்து எந்தெந்த நிறுவனங்களுக்கு அரிசி விடுவிக்கப்பட்டது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) வருடாந்த தேவைக்குப் போதிய அரிசி கையிருப்பு பேணிச் செல்லப்படவில்லை எனின், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

(ii) போதியளவு அரிசி கையிருப்பினைப் பேணிச் செல்லாததன் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் தாக்கம் யாதென்பதையும்;

அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-05

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-09-05

பதில் அளித்தார்

கௌரவ நலின் பிரனாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks