பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2012-11-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

2332/2012: திஸ்ஸமகாராம பிரதேச செயலகப் பிரிவு விவசாயக் காணிகள்: சுவீகரிப்பு

2332/ ’12

 

கௌரவ சஜித் பிரேமதாச,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)      திஸ்ஸமகாராம பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்திற்குரிய கிரிந்த கிராம உத்தியோகத்தர் பிரிவிலிருந்து ரன்மினிதென்ன வரையிலான பிரதேசத்தில் 25 வருடங்களுக்கு மேலாக சேனைப் பயிர்ச் செய்கை செய்து வாழ்க்கை நடாத்தும் சுமார்  5000 விவசாயக் குடும்பங்கள் இருக்கின்றனர் என்பதையும்;

(ii) 2007ஆம் ஆண்டு காடு பேணல் திணைக்களத்தினால் காணித் தொகை மதிப்பீடு எனக் கூறி இவ்விவசாயக் காணிகளை நில அளவை செய்து எல்லைக் கற்கள் நடப்பட்டுள்ளதென்பதையும்;

(iii) இவ்வாறு நில அளவை செய்யப்பட்ட விவசாயக் காணிகளை சுவீகரிக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) இவ் விவசாயக் காணிகள் சுவீகரிக்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

(ii) விவசாயக் காணிகளை சுவீகரிப்பதனால் காணிகளை இழந்த விவசாயிகளுக்கு தமது வாழ்க்கையைக் கொண்டு நடாத்துவதற்காக இப்பிரதேசத்தில் ஒரு ஏக்கர் காணியை வழங்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

(iii) இவ்விடயம் எவ்வளவு காலத்தில் நிறைவு செய்யப்படும் என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-20

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ඒ.ආර්.එම්. අබ්දුල් කාදර් මහතා (පරිසර නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு ஏ.ஆர்.எம். அப்துல் காதர் - சுற்றாடல் பிரதி அமைச்சர்)

(The Hon.  A.R.M. Abdul Cader - Deputy Minister of Environment)

கெளரவ சஜித் பிரேமதாஸ அவர்களின் கேள்விக்கான பதில்:

(அ)    (i)        திஸ்ஸமகாராம பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்தில் திஸ்ஸமகாராம வீச்சிடையின் - திஸ்ஸமகாராம காவல் எல்லையில் நிமலவ அரச வனத்தினுள் மேற்படி பிரதேசம் அமைந்துள்ளது. இப்பிரதேசம் கிரிந்த கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உரித்தாயுள்ள ரண்மினிதென்ன அரச வனாந்தரம்வரை பரவியுள்ளது. மேற்படி பகுதியினுள் சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்ற ஏறத்தாழ 1,000 விவசாயிகள் உள்ளனர்.

(ii) 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் சுற்றாடல் அமைச்சின்கீழ் காணப்பட்ட வன வளங்கள் முகாமைத்துவக் கருத்திட்டத்தின்மூலம் நிமலவ அரச காணிகளின் எல்லைகளை அடையாளமிடுதல் நடைபெற்றுள்ளது. அச்சந்தா்ப்பத்தில் நிரந்தரப் பயிர்களைக்கொண்ட காணிகள் மற்றும் நீண்டகாலம் வசித்துவருபவர்களினால் அபிவிருத்தி செய்யப்பட்ட காணிகள் நீங்குகின்றவாறு எல்லைத் தூண்கள் நடப்பட்டுள்ளன. சேனைப் பயிர்ச்செய்கை செய்யப்பட்ட சில காணிப் பகுதிகள் எல்லையினுள் வந்துள்ளபோதிலும் பரம்பரையாக சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்ந்தும் அக்காணிகளில் செய்கையில் ஈடுபடுவதற்கு வன பாதுகாப்புத் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்படி பிரதேசம் காட்டு யானைகள் அதிகளவில் நடமாடுகின்ற பிரதேசமாகையால் காட்டு யானைகளைப் பாதுகாக்கும் கொள்கைக்கிணங்க அவற்றுக்கு உணவு வழங்குதலும் சேனைப் பயிர்ச்செய்கையின் மேலுமொரு நோக்கமாகும்.

(iii)      மேற்படி காணிகள் நிமலவ அரச வனாந்தரத்திற்கு சொந்தமாகையால் அக்காணிகளைச்  சுவீகரித்தல் நடைபெறாது.

 (ஆ)    (i) மேற்படி (அ) (iii) விடையின் பிரகாரம் சுவீகரிக்கப்படுதல் நடைபெறாததனால் ஏற்புடையதாகாது.

 (ii)      வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கு இயலுமானவாறு சேனைப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு  இடமளிக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஏற்புடையதாகாது

(iii)       ஏற்புடையதாகாது.

(இ)     எழாது.

 

 

பதில் தேதி

2012-11-20

பதில் அளித்தார்

கௌரவ (அல்ஹாஜ்) ஏ.ஆர்.எம். அப்துல் காதர், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks