01

E   |   සි   |  

 திகதி: 2023-10-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

2534/2023: குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவு: சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துதல்

2534/2023

கௌரவ இம்ரான் மஹ்ரூப்,— சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) திருகோணமலை மாவட்டத்தின், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவின் நிலாவெளி, குச்சவெளி மற்றும் புல்மோட்டை போன்ற பிரதேசங்கள் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் பிரதேசங்கள் என்பதை அறிவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(iii) எதிர்காலத்தில் மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களில் சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்திடமுள்ள வேலைத்திட்டம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-04

கேட்டவர்

கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-10-04

பதில் அளித்தார்

கௌரவ ஹரின் பிரனாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks