01

E   |   සි   |  

 திகதி: 2023-04-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

2528/2023: Compartment condition of Trains operating in Trincomalee Railway Station

2528/2023

கௌரவ இம்ரான் மஹ்ரூப்,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)     திருகோணமலை புகையிரத நிலையத்தில் பிரயாணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புகையிரதப் பெட்டிகளின் எண்ணிக்கை எத்தனை;

           (ii)    மேற்படி புகையிரதப் பெட்டிகள் எவ்வளவு காலமாக பிரயாணத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன;

(iii) மேற்குறிப்பிட்ட புகையிரதப் பெட்டிகள் மிகவும் பழமையானவையாகவும் தற்போது பயன்படுத்த முடியாத நிலையிலும் காணப்படுவதை அறிவாரா;

(iv) இலங்கையில் ஏராளமான புகையிரத நிலையங்களுக்கு நவீன புகையிரதப் பெட்டிகள் மற்றும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளபோதிலும் திருகோணமலை புகையிரத நிலையத்துக்கு நவீன புகையிரதப் பெட்டிகள் மற்றும் இயந்திரங்கள் வழங்கப்படாமைக்கான காரணங்கள் யாவை;

(v) திருகோணமலை புகையிரத நிலையத்தினையும் இப்புகையிரத நிலையத்துக்கு வழங்கப்பட்டுள்ள புகையிரப் பெட்டிகளையும் நவீனமயப்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2023-04-26

கேட்டவர்

கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks