01

E   |   සි   |  

 திகதி: 2023-09-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

2394/2023: Renovations in Kekirawa Bus stand

2394/2023

கௌரவ இஷாக் ரஹுமான்,— பிரதம அமைச்சர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பெரும் எண்ணிக்கையான பயணிகள் பயன்படுத்தும் கெக்கிராவ நகரில் அமைந்துள்ள பஸ் தரிப்பு நிலையம் மிகவும் பழைமைவாய்ந்தது என்பதையும்;

(ii) மழை காலத்தில் இது பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) ஆமெனில், மேற்படி பஸ் தரிப்பு நிலையத்தை புனரமைப்புச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-08

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks