logo

02

E   |   සි   |  

 திகதி: 2012-06-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

2254/2012: Housing Loans -Housing Authority

2254/ ’12

 

கௌரவ பீ. ஹரிசன்,— நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் அனுராதபுர மாவட்டத்திலுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் விண்ணப்பப் படிவங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மேற்படி விண்ணப்பப் படிவங்களில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குக் கிடைக்கப்பெற்றுள்ள வீடமைப்புக் கடன் விண்ணப்பப் படிவங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) குறித்த விண்ணப்பப் படிவங்களின்படி வழங்கப்பட்டுள்ள வீடமைப்புக் கடன்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iv) வீடமைப்புக் கடன்களாக வழங்கப்பட்டுள்ள பணத் தொகை யாதென்பதையும்;

(v) மேற்படி வீடமைப்பு கடன்பெற்றவர்களின் பெயர்கள் யாவை என்பதையும்

பிரதேச செயலாளர் பிரிவுகள் வாரியாக வெவ்வேறாக அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) 2012 தயட்ட கிருள நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை பிரதேச செயலாளர் பிரிவுகள் வாரியாக வெவ்வேறாக யாதென்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-06-20

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks