பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2238/ ’12
கௌரவ பி. ஹரிசன்,— உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) வடமத்திய மாகாண சபை சிறுநீரக நோயாளிகளுக்கு இலவசமாக பகிர்ந்தளிப்பதற்காக தரக்குறைவான நீர் வடிகட்டும் சாதனங்களை முறைசாராத விதத்தில் கொள்வனவு செய்துள்ளதென்பதை அவர் அறிவாரா?
(ஆ) மேற்படி நீர் வடிகட்டும் சாதனங்களின் கொள்வனவின்போது,
(i) செலவிடப்பட்ட பணத் தொகை மற்றும் பெற்றுக்கொள்ளப்பட்ட நீர் வடிகட்டும் சாதனங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) பின்பற்றப்பட்ட கேள்விப்பத்திர நடைமுறை யாதென்பதையும்;
(iii) கேள்விப் பத்திரங்களை சமர்ப்பித்த நிறுவனங்களின் பெயர், முகவரி மற்றும் சமர்ப்பித்த விலைகள் தனித்தனியாக யாதென்பதையும்;
(iv) கேள்விப் பத்திரம் வழங்கப்பட்ட நிறுவனத்தின் பெயர், முகவரி யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) நீர் வடிகட்டும் சாதனங்களின்,
(i) தரம் தொடர்பிலான பரிசோதனையை அரசாங்க நிறுவனமொன்றில் மேற்கொள்ளாது, கொள்வனவு செய்த நிறுவனத்திலேயே மேற்கொள்வதற்கு அங்கீகாரம் பெறப்பட்ட நடைமுறை யாதென்பதையும்;
(ii) பகிர்தளிப்பதை நிறுத்துமாறு கணக்காய்வாளர் நாயகம் உத்தரவிட்டிருக்கையில் தொடர்ந்தும் இவை கொள்வனவு செய்யப்படுகின்றனவா என்பதையும்;
(iii) கொள்வனவிற்கான பணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய உத்தியோகத்தர் யாரென்பதையும்;
(iv) கொள்வனவானது அரசாங்க நிதிப் பிரமாணங்களுக்கு முரணாக இடம்பெற்றுள்ளதென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iv) கொள்வனவு தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-06-21
கேட்டவர்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
அமைச்சு
உள்ளூராட்சி, மாகாண சபைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks