பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2236/ ’12
கெளரவ.பீ. ஹரிசன்,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2011ஆம் ஆண்டு சனவரி, பெப்ரவரி மாதங்களில் அனுராதபுர மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பிரதேச செயலாளர் பிரிவுகள் யாவை என்பதையும்;
(ii) ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் வெள்ளத்தால் அனர்த்தத்திற்கு உள்ளான நபர்கள், குடும்பங்களின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் செலுத்தப்பட்ட நட்டஈட்டுத் தொகை எவ்வளவென்பதையும்
(iv) செலுத்தப்பட்ட மேற்படி நட்டஈட்டுத் தொகையானது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தீர்மானிக்கப்பட்டதா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேற்படி வெள்ள அனர்த்தத்தினால் முழு அளவில் சேதமடைந்த மற்றும் பகுதியளவு சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி வீடுகளில் முழு அளவில் சேதமடைந்த மற்றும் பகுதியளவில் சேதமடைந்த உரிமப்பத்திரம் பெற்ற வீடுகளின் எண்ணிக்கை மற்றும் மேற்படி வீடுகளுக்கென செலுத்திய நட்டஈட்டுத் தொகை எவ்வளவென்பதையும்;
(iii) முழு அளவில் சேதமடைந்த மற்றும் பகுதியளவில் சேதமடைந்த உரிமப்பத்திரமற்ற வீடுகள் மற்றும் மேற்படி வீடுகளுக்கென செலுத்தப்பட்ட நட்டஈட்டுத் தொகை எவ்வளவென்பதையும்;
ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரவிற்கேற்ப தனித்தனியே அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-06-19
கேட்டவர்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
அமைச்சு
அனர்த்த முகாமைத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks