02

E   |   සි   |  

 திகதி: 2012-11-15   பதிலளிக்கப்பட்டவைகள் 

2205/2012: அரசாங்க மரக் கூட்டுத்தாபனம் : நிதி நடவடிக்கைகள்

2205/ ’11

கௌரவ ரவி கருணாநாயக்க,—  சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்க மரக் கூட்டுத்தாபம் தொடர்பில்,

          (i)      பயன்படுத்தப்பட்ட மொத்த மூலதனம் மற்றும் ஒதுக்குகள் என்பன யாவையென்பதையும்;

(ii) இலாபம் அல்லது நட்டம் எவ்வளவு என்பதையும்;

(iii) மொத்த பணியாட்டொகுதியினர் எண்ணிக்கை, கிரயம் மற்றும் ஒரு பணியாளருக்கான இலாபம் போன்றன யாதென்பதையும்;

(iv) கழிப்பனவுகள் அல்லது அரசாங்கத்திற்கு செலுத்திய அறவீடுகள் யாதென்பதையும்

வருடாந்த அடிப்படையில் கூறுவாரா?

(ஆ) (i) அரசாங்க மரக் கூட்டுத்தாபத்தின் ஏதாவது பணம் கடந்த 5 ஆண்டு காலங்களில்  பதிவழிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) அவ்வாறாயின், பதிவழிக்கப்பட்ட தொகை யாதென்பதையும்;

(iii) என்ன காரணத்திற்காக அவ்வாறு செய்யப்பட்டது என்பதனையும்;

(iv) அவ்வாறு எப்போது நடைபெற்றது என்பதையும்

அவர் கூறுவாரா?

(இ) (i) அரசாங்க மரக் கூட்டுத்தாபனம் கடந்த 5 ஆண்டு காலப்பகுதியிலே அது பணம் பயன்படுத்திய விதத்தை விட சிறந்த முறையில் வினைத்திறனாக பயன்படுத்தியிருக்க முடியுமா என்பதையும்;

(ii) அவ்வாறாயின், அது எவ்வாறு செய்யப்படுகின்றது என்பதையும்;

(iii) இன்றேல், ஏன் அவ்வாறு செய்யப்படவில்லை என்பதையும்

அவர் சபைக்குத் தெரிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-11-15

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ඒ.ඩී. සුසිල් ප්‍රේමජයන්ත මහතා (පරිසර හා පුනර්ජනනීය බලශක්ති අමාත්‍යතුමා)

(மாண்புமிகு ஏ.டி. சுசில் பிரேமஜயந்த - சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர்)

(The Hon. A.D. Susil Premajayantha - Minister of Environment and Renewable Energy)

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි,  එම ප්‍රශ්නයට පිළිතුර මෙසේයි.

 

பதில் தேதி

2013-03-20

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks