04

E   |   සි   |  

 திகதி: 2023-03-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

1797/2023: புத்தல கைத்தொழிற்பேட்டையின் தொழில்முயற்சியாளர்கள்: நிதி உதவிகள்

1797/2023

கௌரவ குமாரசிறி ரத்னாயக்க,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) உள்நாட்டு கைத்தொழில்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புத்தல கைத்தொழில் பேட்டையின் தொழில் முயற்சியாளர்களுக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

(ii) ஆமெனின், மேற்படி நிதி உதவிகள் வழங்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

(iii) இந்த நிதி உதவிகள் வழங்கப்பட்ட ஒவ்வொரு நபர்/நிறுவனம் தனித்தனியே யாதென்பதையும்;

(iv) மேற்படி ஒவ்வொரு நபர்/நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட தொகை எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) நிதி உதவிகளைப் பெற்றுக்கொண்ட அனைத்து தொழில்முயற்சியாளர்களும் இன்றளவில் தமது கைத்தொழில்களை ஆரம்பித்துள்ளனரா என்பதையும்;

(ii) இக்கைத்தொழில்களுக்கு மத்தியில் வெளிநாட்டு சந்தையை இலக்காகக் கொண்டு தமது உற்பத்திகளை சந்தைப்படுத்தும் கைத்தொழில்கள் யாவை என்பதையும்;

(iii) 2022 முதலாம் காலாண்டில் இக்கைத்தொழில்கள் ஊடாக ஈட்டப்பட்டுள்ள அந்நியச் செலாவணி எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-22

கேட்டவர்

கௌரவ குமாரசிறி ரத்னாயக்க, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-03-22

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks