04

E   |   සි   |  

 திகதி: 2023-08-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

1716/2023: Fuel distribution fraud in Petroleum corporation

1716/2023

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)     இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விநியோகப் பிரிவு, தொழிற்பாட்டுப் பிரிவு மற்றும் கொள்வனவுக் கட்டளைகள் பிரிவு என்பன நேரடியாக இணைந்து, எரிபொருள் கொள்வனவுக் கட்டளைகளுக்குரிய விலைப்பட்டியல்களைத் திருத்தியமைத்து பாரியளவிலான எரிபொருள் மோசடியில் ஈடுபடுவதை அறிவாரா என்பதையும்;

(ii) ஆமெனின், இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) மேற்படி மோசடியுடன் தொடர்புபட்ட நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2023-08-24

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks