02

E   |   සි   |  

 திகதி: 2023-03-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

1674/2023: Murungan Base Hospital in Mannar District

1674/2023
கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) ​​(i) மன்னார் மாவட்டத்தில் உள்ள முருங்கன் வைத்தியசாலை 2018 ஆம் ஆண்டு ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்ட போதிலும், மேற்படி வைத்தியசாலைக்குத் தேவையான வசதிகள் இற்றைவரை வழங்கப்படவில்லை என்பதையும்;
(ii) மருத்துவர்கள் உட்பட மேற்படி மருத்துவமனைக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் தற்போது பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி வைத்தியசாலையில் பிரேத அறை இன்மையால் சடலங்களை மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல வேண்டியிருப்பதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதை அறிவாரா என்பதையும்;
(ii) ஆமெனில், முருங்கன் வைத்தியசாலைக்கு பிரேத அறையை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(iii) முருங்கன் வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகள் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-24

கேட்டவர்

கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks