01

E   |   සි   |  

 திகதி: 2023-03-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

1632/2023: மலையகப் புகையிரதப் போக்குவரத்து: மண்சரிவுகளால் ஏற்படும் இடையூறு

1632/2023

கௌரவ குணதிலக ராஜபக்ஷ,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மண்சரிவு காரணமாக மலைநாட்டுப் புகையிரதப் பாதைகளில் புகையிரதப் போக்குவரத்துக்கு நிதமும் இடையூறுகள் ஏற்படுகின்றன என்பதையும்;

(ii) அதனால் ஏற்படுகின்ற தாமதங்கள் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்நாட்டுப் பயணிகள் ஆகிய இரு தரப்பினரும் அசெளகரியத்துக்கு உள்ளாகின்றனர் என்பதையும்;

(iii) மேற்படி புகையிரதப் பாதைகளை புனரமைப்பதற்காக இராணுவச் சிப்பாய்களையும் புகையிரத ஊழியர்களையும் ஈடுபடுத்துவது செயற்றிறனற்றது என்பதையும்;

(iv) உலகின் ஏனைய நாடுகளில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) இலங்கை புகையிரத திணைக்களத்தின் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்களின் அறிவினைப் பயன்படுத்தி புகையிரதப் பாதைகளில் மண்ணை அகற்றுவதற்கான பெக்கோ இயந்திரமொன்றைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

(ii) ஆமெனில், அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-24

கேட்டவர்

கௌரவ குணதிலக ராஜபக்ஷ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-04-25

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks