பார்க்க

E   |   සි   |  

 திகதி: 2023-07-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

1618/2023: கழிவுப்பொருள் முகாமைத்துவம் பற்றிய தேசியக்கொள்கை: அமுல்படுத்தல்

1618/2023

கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)     2020 ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சினால் கழிவுப்பொருள் முகாமைத்துவம் பற்றிய தேசிய கொள்கை தயாரிக்கப்பட்டு அதன் கீழ் பொறுப்புகள் கையளிக்கப்படும் நிறுவனங்கள் இனங்காணப்பட்டுள்ளன என்பதையும்;

(ii) ஆயினும், 2022 ஆம் ஆண்டு வரை அது தொடர்பான செயற்பாட்டுத் திட்டமொன்று தயாரிக்கப்படவில்லை என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) மேற்படி கொள்கையை அமுல்படுத்துவதற்கான செயற்பாட்டுத் திட்டமொன்று இன்றளவில் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி செயற்பாட்டுத் திட்டம் யாதென்பதையும்;

(iii) இன்றேல், அது தயாரிக்கப்படும் திகதி யாதென்பதையும்;

(iv) மேற்படி கொள்கையை அமுல்படுத்தும்போது நடைமுறை ரீதியில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் இனங்காணப்பட்டுள்ளனவா என்பதையும்;

(v) ஆமெனில், மேற்படி சிக்கல்களைத் தீர்ப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள முறையியல் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2023-07-05

கேட்டவர்

கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-09-19

பதில் அளித்தார்

கௌரவ நஸீர் அஹமட், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks