04

E   |   සි   |  

 திகதி: 2023-05-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

1615/2023: "பரிசர மாவத்த" கருத்திட்டம்: விபரம்

1615/2023

கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) "பரிசர மாவத்த கருத்திட்டத்தின்" கீழ், தெரிவுசெய்யப்பட்ட மாகாணங்களில் சுற்றாடல் பாதைகளை அமைப்பதற்காக சுற்றாடல் அமைச்சு 2018 ஆம் ஆண்டில் ரூ. 5 மில்லியன் நிதியை அப்போதைய அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு விடுவித்துள்ளபோதிலும், குறிப்பிட்ட நிதியில் ரூ.20,000/- மாத்திரம் செலவிடப்பட்டமைக்கான காரணங்கள் யாவை;

(ii) 2021 ஆம் ஆண்டில் 100 பரிசர மாவத்தகளை அமைப்பதற்கு திட்டமிடப் பட்டிருந்தபோதிலும், சுற்றாடல் பாதை தொடர்பிலான பொருள்கோடல் மற்றும் அளவுகோல்கள் அறிமுகம் செய்யப்படாமைக்கான காரணங்கள் யாவை;

(iii) சுற்றாடல் அமைச்சின் 2021ஆம் ஆண்டுக்கான பணித் திட்டத்தில் பரிசர மாவத்த கருத்திட்டம் உள்வாங்கப்படாமைக்கான காரணங்கள் யாவை;

(iv) பரிசர மாவத்த கருத்திட்டத்தின் உத்தேச நோக்கங்களை அடையாமல் குறிப்பிட்ட கருத்திட்டத்தை செயற்படுத்துவதை நிறுத்தியமைக்கான காரணங்கள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-23

கேட்டவர்

கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-05-23

பதில் அளித்தார்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks