பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2023-03-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

1458/2023: Inland canned fish industry

1458/2023

கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல்,— கடற்றொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கைக்கு வருடாந்தம் இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களின் அளவு எத்தனை தொன்கள் என்பதையும்;

(ii) அதற்காக செலவிடப்படும் பணத் தொகை எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) இலங்கையில் நன்னீர் மீன்களை டின்களில் அடைக்கும் கைத்தொழிலை மேற்கொள்வதற்கு தனியார் துறையைச் சார்ந்த தொழில்முயற்சியாளர்கள் முன்வந்துள்ளனரா என்பதையும்;

(ii) ஆமெனில், நன்னீர் மீன்களை டின்களில் அடைப்பதற்கான தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நீர்த்தேக்கங்கள் யாவை என்பதையும்;

(iii) அத்தொழிற்சாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இன்றளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-24

கேட்டவர்

கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல், பா.உ.

அமைச்சு

கடற்றொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks