பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1329/2023
கௌரவ இஷாக் ரஹுமான்,— நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் குடி நீர்ப் பிரச்சினை நிலவும் கிராமங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்;
(iii) அக்கிராமங்களில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-07-18
கேட்டவர்
கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.
அமைச்சு
நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
(அ) (i) · குடிநீர் வசதிகள் வழங்கப்பட்டிராத கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை - 102
· நீரின் தரம் தொடர்பான சிக்கல்கள் நிலவும் கிராமிய சமூக நீர் வழங்கல் திட்டங்கள் ஊடாக நீரைப் பெற்றுக்கொள்ளும் கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை - 170
· குடிநீர்ப் பிரச்சினை நிலவும் கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை - 272
(ii) சுத்தமான குடிநீர் வசதிகள் வழங்கப்பட்டிராத கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை இணைப்பு 01இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
· நீரின் தரம் தொடர்பான சிக்கல்கள் நிலவும் கிராமிய சமூக நீர் வழங்கல் திட்டங்கள் ஊடாக நீரைப் பெற்றுக்கொள்ளும் கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை இணைப்பு 02இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணைப்பு 01, இணைப்பு 02 என்பவற்றை நான் சபாபீடத்துக்குச் *சமர்ப்பிக்கின்றேன்.
(iii) 1. வெளிநாட்டுக் கடன் அடிப்படையில் கீழ் குறிப்பிடப்படும் திட்டங்களை நடைமுறைப் படுத்தல்
2. அரசாங்கத்தின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி மற்றும் CEDE (Capacity Enhancement and Distribution Expansion) கீழான திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
3. 2025ஆம் ஆண்டின் பின்னர் நடைமுறைப் படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பாரிய ளவிலான வெளிநாட்டு/ உள்நாட்டு உதவி வழங்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
(b) Not relevant.
பதில் தேதி
2023-07-18
பதில் அளித்தார்
கௌரவ ஜீவன் தொண்டமான், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks