பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2023-03-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

1322/2023: Technical officer vacancies in Matale district state institutes

1322/2023

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன,— பிரதம அமைச்சர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)     மாத்தளை மாவட்டத்தில் அரச நிறுவனங்களுக்கென அங்கீகரிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப உத்தியோகத்தர் பதவிகளின் எண்ணிக்கை;

           (ii)    தற்போது சேவையாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை;

(iii) தற்போது மேற்குறிப்பிட்ட பதவியில் நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை;

யாவையென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) தொழில்நுட்ப உத்தியோகத்தர் பதவியில் வெற்றிடங்கள் நிலவுகின்றமையானது மாத்தளை மாவட்டத்தின் நிர்மாணப் பணிகளின் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2023-03-23

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks