பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2023-03-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

1321/2023: Organization details of Hurulu Environment Development association

1321/2023

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன,— வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மின்னேரியா மற்றும் கவுடுல்ல ஆகிய தேசியப் பூங்காக்களில் சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கத்துடன் "ஹுருலு பரிசர வனோத்யான சங்வர்தன சமித்திய" என்ற பெயரில் அமைப்பொன்று தாபிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

(ii) குறித்த அமைப்பு வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணாக தாபிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

(iii) குறித்த அமைப்பினால் அரச நிதிக் கொள்கைக்கு முரணாக ஒரு கோடி எழுபது இலட்சம் ரூபா பெறப்பட்டுள்ளது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) மேற்படி நிறுவனத்தால் புரியப்பட்டுள்ள நிதி மோசடி தொடர்பில் அமைச்சு எடுக்கும் நடவடிக்கை யாதென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-10

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks