04

E   |   සි   |  

 திகதி: 2023-04-28   பதிலளிக்கப்பட்டவைகள் 

1301/2023: Details of Apparel industry

1301/2023

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— ​​கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) ​​(i) இலங்கையில் தற்போது இயங்கும் நிலையிலுள்ள ஆடைத் தொழிற்சாலை களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மேற்படி ஆடைத் தொழிற்சாலைகளினால் உருவாக்கப்பட்டுள்ள நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை தனித்தனியாக யாதென்பதையும்;

(iii) 2020 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை மேற்படி ஆடைத் தொழிற்சாலைகளின் மூலம் இலங்கையின் மொத்த தேசிய வருமானத்திற்கு கிடைத்துள்ள பங்களிப்பு ஒவ்வொரு வருடத்திற்கும் ஏற்ப சதவீத அடிப்படையில் தனித்தனியாக யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) தற்போதைய எரிபொருள் நெருக்கடி ஆடைத் தொழில்துறை மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

(ii) இலங்கையில் ஆடைத் தொழில்துறையை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-04-28

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

கைத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks