04

E   |   සි   |  

 திகதி: 2023-03-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0860/2023: 2019-2022ஆம் காலப்பகுதியில் இறந்த கொவிட் -19 உடல்கள்: அகற்றிய முறைகள்

860/2023

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2019 முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் இலங்கையில் கொவிட்-19 நோயுடன் தொடர்புடையதாக —

(i) ஆய்வுகூடத்தினால் உறுதி செய்யப்பட்ட நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை;

(ii) உறுதி செய்யப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை;

(iii) மரணித்தவர்களின் வயது, பால், வதிவிட மாகாணம் மற்றும் மாவட்டம், இனம் மற்றும் சமயம் அடிப்படையிலான மரணங்களின் எண்ணிக்கை விபரங்கள்;

ஆகியவற்றை அவர் இச்சபைக்கு வெவ்வேறாக தெரிவிப்பாரா?

(ஆ) 2019 முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் இலங்கையில் கொவிட்-19 மரணங்களுடன் தொடர்புடையதாக —

(i) சடலங்களை அகற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட முறை/முறைகள்;

(ii) தகனக்கிரியை மேற்கொள்ளப்பட்ட சடலங்களின் மொத்த எண்ணிக்கை;

(iii) அடக்கம் செய்யப்பட்ட சடலங்களின் மொத்த எண்ணிக்கை;

(iv) தகனக்கிரியை மற்றும் அடக்கம் செய்யப்பட்டவர்களின் வயது, பால், வதிவிட மாகாணம் மற்றும் மாவட்டம், இனம் மற்றும் சமயம் அடிப்படையிலான விபரங்கள்;

ஆகியவற்றை அவர் இச்சபைக்கு வெவ்வேறாக தெரிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-23

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-08-09

பதில் அளித்தார்

கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks